மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி: கல்வீரம்பாளையம் பள்ளிக்கு முதல் பரிசு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில், கல்வீரம்பாளையம் அரசு பள்ளி மாணவி முதல் பரிசு பெற்றார்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.அரசு கலைக்கல்லுாரியில், எட்டு தலைப்புகளில் நடந்த பேச்சுப் போட்டியில் 13 பள்ளி மாணவர்கள், 23 கல்லுாரி மாணவர்கள்

கோவை: தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில், கல்வீரம்பாளையம் அரசு பள்ளி மாணவி முதல் பரிசு பெற்றார்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.அரசு கலைக்கல்லுாரியில், எட்டு தலைப்புகளில் நடந்த பேச்சுப் போட்டியில் 13 பள்ளி மாணவர்கள், 23 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கலாமணி முதல் பரிசு, சர்வஜன மேல்நிலைப்பள்ளி மாணவர் விஷால் இரண்டாம் பரிசு, வி.எல்.பி., ஜானகியம்மாள் பெண்கள் பள்ளி மாணவி ஸ்வாதிகா மூன்றாம் பரிசு பெற்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை, கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆஷா விகாஷினி, குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷானா பெற்றனர்.கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி மாணவர் ராபின் ஜோஸ்வா முதல் பரிசு, நிர்மலா மகளிர் கல்லுாரி மாணவி பர்சானா பர்வீன் இரண்டாம் பரிசு, மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவி ஷர்மிளா மூன்றாம் பரிசு பெற்றனர்.தமிழ்த்துறை தலைவர் சேனாவரையன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். போட்டி ஏற்பாடுகளை, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் புவனேசுவரி செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X