பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக ஆதார் மையம்| Dinamalar

'பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக ஆதார் மையம்'

Added : நவ 19, 2021
Share
கோவை: பள்ளி மாணவர்களின் நலன் கருதி பிரத்யேக ஆதார் மையம் ஒன்றியம் வாரியாக பள்ளிகளில் அமைக்க, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை, எமிஸ் ஒருங்கிணைந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.இ - சேவை மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் பதிவு செய்ய பெற்றோர் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல

கோவை: பள்ளி மாணவர்களின் நலன் கருதி பிரத்யேக ஆதார் மையம் ஒன்றியம் வாரியாக பள்ளிகளில் அமைக்க, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை, எமிஸ் ஒருங்கிணைந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.இ - சேவை மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் பதிவு செய்ய பெற்றோர் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல மாணவர்கள் ஆதார் எண் வழங்க தொடர்ந்து தாமதம் செய்வதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி பேரூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜசேகர் கூறுகையில்,''அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களில், பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் பலர் தினக்கூலியை விட்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதனால், சில மாணவர்கள் ஆதார் எண் வழங்க தொடர்ந்து தாமதப்படுத்துகின்றனர். மாணவர்கள் நலன் கருதி, ஒன்றிய அளவில் பள்ளிகளை தேர்வு செய்து, பிரத்யேக ஆதார் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X