நூல் விலை உயர்வால் 'சிக்கலில்' வர்த்தகர்கள்: போராட்டத்தில் குதிக்க ஆலோசனை 

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: தமிழகத்தில் அன்றாடம் உயர்ந்து வரும் நுால் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜவுளி வணிகர்கள் விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.அன்மைக்காலமாக நுால் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நாற்பது நாட்களில் 40ம் எண் நுால் ஒரு கிலோ 250 ரூபாயிலிருந்து 330



கோவை: தமிழகத்தில் அன்றாடம் உயர்ந்து வரும் நுால் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜவுளி வணிகர்கள் விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.அன்மைக்காலமாக நுால் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நாற்பது நாட்களில் 40ம் எண் நுால் ஒரு கிலோ 250 ரூபாயிலிருந்து 330 ஆகவும், 30ம் எண் நுால் 200 ரூபாயிலிருந்து 290 ஆகவும், 20ம் எண் நுால் 140 ரூபாயிலிருந்து 190 ஆகவும், வெப்ட் வகை நுால் 40ம் எண் ஒரு பை 11 ஆயிரத்தில் இருந்து 14,200 ஆகவும் உயர்ந்துள்ளது.பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஆர்டர் பெற்றவர்கள், நுால் விலை உயரும் போது, அதனை ஆர்டர் பெற்ற தொகைக்குள் முடிக்க முடியாமல், மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.ஆகவே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, நுால் விலையை குறிப்பிட்ட மாத அவகாசங்களில் மட்டுமே உயர்த்த வேண்டும். அன்றாடம் உயர்த்தும் நடைமுறையை கைவிட வேண்டும் என, ஜவுளித்தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.நுால் வர்த்தகர்கள் கூறுகையில், 'நுால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை கண்டித்து ஒவ்வொரு மாநிலத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோவையில் விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிட ஆலோசித்து வருகிறோம்' என்றனர்.கடந்த நாற்பது நாட்களில் 40ம் எண் நுால் ஒரு கிலோ 250 ரூபாயிலிருந்து 330 ஆகவும், 30ம் எண் நுால் 200 ரூபாயிலிருந்து 290 ஆகவும், 20ம் எண் நுால் 140 ரூபாயிலிருந்து 190 ஆகவும், வெப்ட் வகை நுால் 40ம் எண் ஒரு பை 11 ஆயிரத்தில் இருந்து 14,200 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X