சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி மது கடத்தல் 5 பேர் சுற்றிவளைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:புதுச்சேரி மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்தி வந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த 'இன்னோவா' காரை சோதனையிட்டனர். அதில், 140 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள்பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.மது பாட்டில்கள் மற்றும் காரை

மயிலாடுதுறை:புதுச்சேரி மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்தி வந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த 'இன்னோவா' காரை சோதனையிட்டனர். அதில், 140 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள்பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மது பாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த 20 - 28 வயதுடைய மூவரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். இதேபோல, சீர்காழி ரயில்வே ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஆட்டோவை சோதனையிட்டனர்.அதில் 148 புதுச்சேரி மாநில சாராய பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சாராயம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து, 26 - 65 வயதுடைய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X