பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கல்வி நிறுவன தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலை முதலிடம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., உயர் கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.காரைக்குடி அழகப்பா பல்கலை., குவேக்கரலி சைமண்ட்ஸ் தர நிர்ணய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் தரவரிசை பட்டியலில் 220 வது இடத்தைப் பெற்றுள்ளது.2021 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 650க்கும் மேற்பட்ட

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., உயர் கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை., குவேக்கரலி சைமண்ட்ஸ் தர நிர்ணய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் தரவரிசை பட்டியலில் 220 வது இடத்தைப் பெற்றுள்ளது.2021 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 650க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான நிறுவனங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டன.

இதில், காரைக்குடி அழகப்பா பல்கலை., 220 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் 23வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

க்யூ.எஸ்., நிறுவனத்தால் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தர வரிசை படுத்தப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலை., தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெ.ஜெயகாந்தன் 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்தார். தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ ப்ளஸ் அங்கீகாரம், மத்திய அமைச்சகம் வழங்கும் தரவரிசையில் 33 வது இடம், உலகத் தரவரிசையில் உலக அளவில் 501 - 600 வது பிரிவில் இடம்பெற்று உள்ளது.

இந்த தரவரிசையில் அழகப்பா பல்கலை இடம் பெறச் செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் பொறுப்பு குழுத் தலைவர் டி.கார்த்திகேயன் உறுப்பினர்கள் ஆர்.சுவாமிநாதன், பேராசிரியர் எஸ். கருப்புசாமி மற்றும் பதிவாளர் சி. சேகர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X