செய்தி செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: நாளை மற்றும் நாளை மறுநாள் வாய்ப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது.இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே நவ., 13, 14, 27 மற்றும் 28 ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த, 13 மற்றும் 14ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.ஆனால், மழை காரணமாக



கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது.இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே நவ., 13, 14, 27 மற்றும் 28 ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த, 13 மற்றும் 14ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.ஆனால், மழை காரணமாக குறிப்பிட்ட இரு நாட்களில் பல இடங்களில் சிறப்பு முகாம் நடக்கவில்லை என்பதால், கூடுதலாக நாளை (20ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில், சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதையடுத்து, 20, 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட ஓட்டு சாவடி மையங்களிலும் காலை, 10.00 மணி முதல், மாலை, 5.00 மணி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இதனால், 2022ம் ஆண்டு ஜன.,1ம் தேதியில், 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய குறிப்பிட்ட படிவங்கள் மூலமாகவும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய நவ., 30ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X