ஆம்னி மீது லாரி மோதி ஐந்து பேர் பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி மீது லாரி மோதி ஐந்து பேர் பரிதாப பலி

Added : நவ 19, 2021
Share
ஈரோடு:'மாருதி ஆம்னி' மீது 'டாரஸ்' லாரி மோதியதில், டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். லாரி டிரைவர் மது போதையில் இருந்ததால், விபத்து நடந்தது தெரிந்தது.ஈரோடு கூட்ஸ்ஷெட்டில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய டாரஸ் லாரி, சிவகிரி புறப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநி கோவிலில் தரிசனம் செய்து, ஈரோடு மாவட்டம், முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஏழு பேர், வாடகை மாருதி
 ஆம்னி மீது லாரி மோதி ஐந்து பேர் பரிதாப பலி

ஈரோடு:'மாருதி ஆம்னி' மீது 'டாரஸ்' லாரி மோதியதில், டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். லாரி டிரைவர் மது போதையில் இருந்ததால், விபத்து நடந்தது தெரிந்தது.
ஈரோடு கூட்ஸ்ஷெட்டில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய டாரஸ் லாரி, சிவகிரி புறப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநி கோவிலில் தரிசனம் செய்து, ஈரோடு மாவட்டம், முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஏழு பேர், வாடகை மாருதி ஆம்னியில் ஊருக்கு வந்தனர்.மொடக்குறிச்சியைச் சேர்ந்த படையப்பா, 42, ஓட்டினார்.

மதியம் 12:15 மணியளவில் சிவகிரி அருகே பாரபாளையம் பகுதியில் வந்த போது, ஆம்னி மீது டாரஸ் லாரி மோதியது. இதில் ஆம்னி நொறுங்கி உருக்குலைந்தது. டிரைவர் படையப்பா மற்றும் 18 - 43 வயதுள்ள நான்கு பெண்கள் பலியாகினர். மூன்று ஆண்கள் பலத்த காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான ஈரோடு, கே.கே. நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 41, என்பவரை சிவகிரி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவர் மது போதையில் இருந்தது தெரிந்தது.சாலை மறியல்விபத்து நடந்த பகுதியில் கூடிய மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 'இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். சாலை நடுவில் தடுப்பு அமைக்க வேண்டும்.'விபத்து பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்' என வலியுறுத்தினர். போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கவே மறியலை கைவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X