செய்தி செய்தி

தமிழ்நாடு

சுத்தமான தேன் நுாலிழை போல் இறங்கும்; சொட்டு சொட்டாக விழுந்தால் கலப்படம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: 'மெல்லிய நுால் இழை போல தேன் கீழே இறங்கினால் அது சுத்தமான தேன். சொட்டு சொட்டாக இறங்கினால் கலப்படம் செய்யப்பட்ட தேன்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களில், அதிக சத்துக்கள் நிறைந்தது தேன். கலப்படமற்ற தேன் கெட்டுப்போகாது. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.உள்ளூர் மளிகை கடை முதல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மருந்துக்கடைகள்,

கோவை: 'மெல்லிய நுால் இழை போல தேன் கீழே இறங்கினால் அது சுத்தமான தேன். சொட்டு சொட்டாக இறங்கினால் கலப்படம் செய்யப்பட்ட தேன்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களில், அதிக சத்துக்கள் நிறைந்தது தேன். கலப்படமற்ற தேன் கெட்டுப்போகாது. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.உள்ளூர் மளிகை கடை முதல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மருந்துக்கடைகள், நாட்டு மருந்துக்கடைகள் என எல்லா இடங்களிலும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் விற்பனை செய்யப்படுகிறது.டிமாண்ட் மற்றும் விலை காரணமாக, தேனில் கலப்படம் செய்வது அதிகரித்து விட்டது. கலப்படம் செய்யப்பட்ட தேனை, வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனையில் கண்டுபிடிக்க முடியும்.ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு துளி தேன் விட வேண்டும். மெல்லிய நுால் இழை போல, தேன் துளி தண்ணீரில் இறங்கினால் அது நல்ல தேன். கலப்படம் செய்யப்பட்ட தேன் அப்படி இறங்காது; சொட்டு சொட்டாக இறங்கும்.தண்ணீரில் விடும்போது, தேன் கரைந்து விட்டால் கலப்படம் செய்யப்பட்டது என்று அர்த்தம். கரைந்து போகாமல் பாத்திரத்தின் அடிப்படையில் தங்கினால், அது சுத்தமான தேன்.கண்ணாடி பாத்திரத்தில் தேன் ஊற்றி, சில மணி நேரம் வைத்திருந்தாலே, ஒரிஜினல், கலப்படம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்து விடும். சுத்தமான தேன் அடர்த்தி ஒரே சீராக இருக்கும். ஆனால், கலப்படம் செய்யப்பட்ட தேனில் அடர்த்தி மாறியிருப்பது நமக்கு புலப்படும்.இதேபோல, சர்க்கரை வெல்லத்தில் சாக்கரின் இருப்பதையும் அறிய முடியும். கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில், சிறிய அளவு வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்க்க வேண்டும்.சுண்ணாம்புத்துாள் அல்லது மாவு இருந்தால் கண்ணாடி பாத்திரத்தின் அடிப்பகுதியில் படியும். இதன் மூலம் கலப்படத்தை எளிதில் அறியலாம் என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X