'உங்களுக்கு சர்க்கரையா?' என அதிர்ச்சியடைந்த காலம் போய், 'உங்களுக்கு சுகர் இல்லையா?' என ஆச்சரியப்படும் அளவிற்கு சர்க்கரை நோய்இன்று வீட்டுக்கு ஒருவருக்காவது இருக்கிறது.சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க பலவிதமான சிகிச்சைகள், உணவு கட்டுப்பாடு முறைகள் உள்ளன. மருத்துவ அறிவியல் வளர்ச்சியில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதுவிதமான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த குறைபாட்டை அதிநவீன சிகிச்சை வசதிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்கிறார், கே.எம்.சி.எச்., நீரிழிவு சிகிச்சைத் துறை மருத்துவர் சிவஞானம்.அவர் கூறியதாவது:சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என இதுவரை வகைப்படுத்தப்பட்டுவருகிறது. இனி வரும் காலங்களில் மேலும் சில துணைப்பிரிவுகளாக, சர்க்கரை நோய் வகைப்படுத்தப்படும்.நபருக்கு நபர், சிகிச்சைகள் வேறுபடும். இதன்மூலம், மருந்துகளின் விலை மற்றும் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும். சிசிச்சையின் திறனும்மேம்பட்டு இருக்கும்.நோயாளிகளுக்கு அவரவர் மரபணு மற்றும் வாழ்வியல் சூழல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படும். 'பிரிசிஷன் மருந்து' என்று கூறப்படும் சர்க்கரை நோய்க்கான துல்லிய மருந்து கண்டுபிடிப்பில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான, கே.எம்.சி.எச்., நவீன மருத்துவமுறை களை அறிமுகம் செய்வதில் முன்னோடி மையமாக திகழ்கிறது.இங்கு செயல்படும் பிரத்யேக நீரிழிவு நோய் சிகிச்சைத் துறையில், அதிநவீன மருத்துவ வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சர்க்கரை நோய் இதர உறுப்புகளையும் பாதிக்கும் என்பதால், அவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகளும், உணவு முறை ஆலோசனையும் வழங்கப்படுகிறது.வெளி நோயாளிகள் அனைத்து வேலை நாட்களிலும், காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஆலோசனை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE