மலை உச்சிக்கு சென்றது மஹா தீப கொப்பரை

Added : நவ 19, 2021
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை, மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. 1,000 மீட்டர் காடா துணிதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா
 மலை உச்சிக்கு சென்றது மஹா தீப கொப்பரை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை, மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.


1,000 மீட்டர் காடா துணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.முன்னதாக, நேற்று மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொட்டும் மழையிலும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, முதல் கட்டமாக 500 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம் ஆகியவையும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.


வெறிச்சோடிய நகரம்

வழக்கமாக தீப விழாவுக்கு, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால், 17ம் தேதி முதல், வரும் 20ம் தேதி வரை திருவண்ணாமலை நகருக்கு வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலீசார், மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து, பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.அத்தியாவசிய பணிக்கு மட்டும் செல்கின்றனர். ஆனால், அவர்களிடமும் போலீசார் கெடுபிடி செய்கின்றனர்.
நகரம் வெறிச்சோடி உள்ள நிலையில், ஆங்காங்கே தெருக்களில் கம்பி தடுப்பு, பேரிகார்டு அமைத்து, பொதுமக்களை வெளியே செல்ல முடியாமல் தடுத்து வருகின்றனர். திருவண்ணாமலை வழியாக, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நகரினுள் அனுமதிக்கப்படாமல், புதிய பைபாஸ் சாலை வழியே அனுப்பப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X