சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முற்றுகை

Added : நவ 19, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தை வளநாடு அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.முதுகுளத்துார் அருகே வளநாடு கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்மாயில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வளநாடு, செங்கப்படை, இந்திரா நகர், தெய்வதானம் கிராமத்தில் உள்ள 2000 ஏக்கர் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். புஷ்பவனம் கிராமத்தில் உள்ள சிலர்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தை வளநாடு அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

முதுகுளத்துார் அருகே வளநாடு கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்மாயில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வளநாடு, செங்கப்படை, இந்திரா நகர், தெய்வதானம் கிராமத்தில் உள்ள 2000 ஏக்கர் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். புஷ்பவனம் கிராமத்தில் உள்ள சிலர் தடுப்பணைகளை சேதப்படுத்தி வருவதாக கிராமமக்கள் கூறுகின்றனர். எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை.கிராமமக்கள் பலமுறை மனுஅளித்தும் பயனில்லை.

இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கண்மாய் தண்ணீரை தேக்கி வைக்கவும் வலியுறுத்தி முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில்வந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X