தமிழ்நாடு

இணைப்பு சாலைகள் உருவாக்க ரூ.144.80 கோடி! ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பியது மாநகராட்சி

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் இணைப்பு சாலை ஏற்படுத்த, ரூ.144.80 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.நகர ஊரமைப்புத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட திட்டச்சாலைகளை, கோவை மாநகராட்சி பகுதியில் ஏற்படுத்தாதது மற்றும் இணைப்பு சாலைகள் உருவாக்காதது உள்ளிட்ட காரணங்களால், பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து



கோவை: கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் இணைப்பு சாலை ஏற்படுத்த, ரூ.144.80 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.நகர ஊரமைப்புத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட திட்டச்சாலைகளை, கோவை மாநகராட்சி பகுதியில் ஏற்படுத்தாதது மற்றும் இணைப்பு சாலைகள் உருவாக்காதது உள்ளிட்ட காரணங்களால், பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு, 15 நிமிடத்துக்குள் செல்ல வேண்டிய துாரத்தை கடக்க, 45 நிமிடங்களுக்கு மேலாகிறது. பல இடங்களில் அவசியமின்றி சுற்றிச் செல்ல வேண்டிய அவஸ்தை ஏற்படுவதால், நேரமும், எரிபொருளும் விரயமாகிறது.திட்டச்சாலைகள் உருவாக்குவது தொடர்பாக, நகர ஊரமைப்புத்துறை திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக,'மாஸ்டர் பிளான்' வெளியிடும்போது, அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.இச்சூழலில் இணைப்பு சாலைகள் உருவாக்குவதற்காக, ரூ.144.80 கோடிக்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்திருக்கிறது.இப்பணிகளுக்கு, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலரின் ஒப்புதல் பெறுவதற்காக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.


என்னென்ன பணிகள்

வார்டு எண்: 56ல் பன்மால் ரோடு, பி.எஸ்.ஜி., ரோடு, பி.பி.எஸ்., காலனி விஸ்தரிப்பு ரோடு, அண்ணா நகர் விஸ்தரிப்பு ரோடு, வரதராஜா மில் பீளமேடு ரோடு ஆகிய பகுதிகளில் ரூ.18.59 கோடிக்கு, விடுபட்ட இணைப்பு சாலை ஏற்படுத்துதல், வார்டு எண்: 65, 66ல் புலியகுளம் பிரதான ரோடு முதல் ராஜிவ்காந்தி நகர் வரை, ரூ.45.62 கோடிக்கு இணைப்பு சாலை, 15வது வார்டில் ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை பிரதான சாலை வரை, ரூ.19.87 கோடிக்கு இணைப்பு சாலை, 56வது வார்டில் அவிநாசி ரோடு அண்ணா நகர் விஸ்தரிப்பு சாலை முதல் வரதராஜா மில் சாலை வரை ரூ.55.54 கோடிக்கு இணைப்பு சாலை அமைத்தல், 40வது வார்டில் எஸ்.என்.ஆர்., கல்லுாரி ரோடு, ஆவராம்பாளையம் ரோடு, நவஇந்தியா ரோடு பகுதிகளில், ரூ.5.18 கோடிக்கு விடுபட்ட இணைப்பு சாலை உருவாக்க, மாநகராட்சி தரப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X