செய்தி செய்தி

தமிழ்நாடு

'யார்னெக்ஸ்' நூல், துணி கண்காட்சி துவங்கியது: மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுப்பதற்கான அம்சங்களுடன், யார்னெக்ஸ் கண்காட்சி துவங்கியுள்ளது.பெங்களூரு எஸ்.எஸ்.,டெக்ஸ்டைல் மீடியா சார்பில், 19வது யார்னெக்ஸ் சர்வதேச நுால் மற்றும் துணி கண்காட்சி, திருப்பூரை அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், ஏ.இ.பி.சி., செயற்குழு



திருப்பூர்: மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுப்பதற்கான அம்சங்களுடன், யார்னெக்ஸ் கண்காட்சி துவங்கியுள்ளது.பெங்களூரு எஸ்.எஸ்.,டெக்ஸ்டைல் மீடியா சார்பில், 19வது யார்னெக்ஸ் சர்வதேச நுால் மற்றும் துணி கண்காட்சி, திருப்பூரை அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், 'நிட்மா' சங்க தலைவர் ரத்தினசாமி, 'டிப்' தலைவர் மணி ஆகியோர், கண்காட்சி அரங்கை திறந்துவைத்தனர்.எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கீழ் தளத்தில் யார்னெக்ஸ்; மேல் தளத்தில் டெக்ஸ் இந்தியா என, இரு பிரிவாக கண்காட்சி நடக்கிறது.திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்கள்; டில்லி, மும்பை, பெங்களூரு, சூரத், நொய்டா, லுாதியானா, அகமதாபாத் உட்பட நாடுமுழுவதும் உள்ள நுால், துணி உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள், மொத்தம் 112 ஸ்டாலில், பல்வேறுவகை நுாலிழை, துணி ரகங்கள் இடம் பெற்றுள்ளன.செயற்கை நுாலிழைபாலியெஸ்டர், விஸ்கோஸ், நைலான், மொடால் போன்ற மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான நுால் மற்றும் துணி ரகங்கள். பயன்படுத்திவிட்டு துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பாலியெஸ்டர் நுாலிழை.விளையாட்டு, நுண்ணுயிர் தொற்றா தன்மை, எளிதில் தீப்பிடிக்காத தன்மை போன்ற சிறப்புவகை ஆடை தயாரிப்புக்கு தேவையான துணி. ஆடைகளில் இணைக்கப்படும் பட்டன், ஜிப், ஹேங்கர், லேஸ், துணி மற்றும் ஆடைகளை ஆய்வு செய்வதற்கு தேவயான அதிநவீன ஆய்வக உபகரணங்கள் என, ஆயத்த ஆடை உற்பத்திக்கு தேவையான புதுமைகள் அனைத்தும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உட்பட, கோவை, கரூர், ஈரோடு ஜவுளி துறையினர்; வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர், கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுவருகின்றனர். கண்காட்சியை, இன்றும் நாளையும், காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை பார்வையிடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X