தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் ;தத்தளித்த திருப்பூர்! தரைப்பாலங்கள் மூழ்கின

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், நேற்று முன்தினம் பெய்த கனமழையில், பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் வாகனங்கள் மூழ்கின.திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் ஆரம்பித்த மழை, நான்கு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதில், மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் ரோட்டில்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் ;தத்தளித்த திருப்பூர்! தரைப்பாலங்கள் மூழ்கின

திருப்பூர்: திருப்பூரில், நேற்று முன்தினம் பெய்த கனமழையில், பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் வாகனங்கள் மூழ்கின.
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் ஆரம்பித்த மழை, நான்கு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதில், மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.

அவிநாசி ரோடு, குமார் நகர், வளையங்காடு ரோட்டில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்றது. அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மங்கலம் ரோட்டில் இருந்து காலேஜ் ரோடு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.டி.எம்.எப்., பாலத்தில், அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றதால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியவில்லை. கார் உட்பட சில வாகனங்கள் சென்று நீரில் மூழ்கியது. நேற்று காலை, மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர்.

மழைப்பாதிப்பு குறித்து தகவலறிந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர், ஈஸ்வரன் கோவில் தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியது. ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே மழை நீர் அதிகப்படியாக வந்ததால், காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.அவ்வழியாக சென்ற, இரண்டு கார் நீரில் சிக்கியது. வடக்கு தீயணைப்பு வீரர்கள், காரை மீட்டனர். அதில் ஒரு கார் முழுவதும் தண்ணீர் புகுந்தது. காரில் இருந்த, மூன்று

பேரை பத்திரமாக மீட்டனர்.
மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதியில் காம்பவுண்ட் வீடு உள்ளிட்டவைகளுக்கு மழை நீர் சென்றது. பொருட்கள் சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர். பிச்சம்பாளையம் புதுார் ராஜா நகரில் ரோட்டில் நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற சரக்கு வேன் சிக்கியது. வாகனத்துக்குள் தண்ணீர் சென்றது. வேனில் இருந்த, மூன்று பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தாராபுரம், கோட்டை மேடு, வடதாரை, மேற்கு தெரு பகுதியில் மழைக்கு மூன்று வீடுகள் சேதமடைந்து, சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் சிக்கி கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.தாழ்வான இடங்களில் இருந்த குடியிருப்புகளுக்குள் மழை நீர் சென்றது. தாராபுரம், தில்லாபுரி அம்மன் கோவிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X