சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் உடலுக்கு மீண்டும் பரிசோதனை

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:இலங்கை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண், 30. இவர் அக்டோபர் 19ம் தேதி கடலில், சக மீனவர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராஜ்கிரண் உயிரிழந்தார்; மற்ற மீனவர்கள் உயிர்

புதுக்கோட்டை:இலங்கை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண், 30. இவர் அக்டோபர் 19ம் தேதி கடலில், சக மீனவர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராஜ்கிரண் உயிரிழந்தார்; மற்ற மீனவர்கள் உயிர் தப்பினர்.
ராஜ்கிரண் உடலில் காயம் இருப்பதால், இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் எனவும், அவரது உடலை மீண்டும் மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவரது மனைவி பிருந்தா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி, மணமேல்குடி தாசில்தார் ராஜா முன்னிலையில், மீனவர் ராஜ்கிரண் சடலத்தை தோண்டி எடுத்து, தடயவியல் துறை டாக்டர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.பின், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X