தமிழ்நாடு

15 ஆண்டுகளில் இல்லாத கனமழை: குண்டடத்தில் அதிகம்; காங்கயத்தில் குறைவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கனமழை பெய்ததால், திருப்பூர் மாநகரில், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மாவட்டத்தில், வரலாறு காணாத அளவுக்கு, பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், திருப்பூர் மாநகரப்பகுதிகள், தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டாலும், வேகமாக மழைநீர் வடிந்ததால், நேற்று காலை



திருப்பூர்: கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கனமழை பெய்ததால், திருப்பூர் மாநகரில், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மாவட்டத்தில், வரலாறு காணாத அளவுக்கு, பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், திருப்பூர் மாநகரப்பகுதிகள், தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டாலும், வேகமாக மழைநீர் வடிந்ததால், நேற்று காலை இயல்பு நிலை திரும்பியுள்ளது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, நேற்று முன்தினம் மாலை துவங்கி இரவு முழுவதும், குண்டடத்தில், 200 மி.மீ., மழை பெய்துள்ளது. தாராபுரத்தில், 132 மி.மீ., அவிநாசி ரோடு - 125 மி.மீ., கலெக்டர் அலுவலகம் - 110 மி.மீ., தெற்கு தாலுகா - 108 மி.மீ.,பல்லடம் - 84 மி.மீ., திருப்பூர் வடக்கு - 73 மி.மீ., அவிநாசி - 70 மி.மீ., மடத்துக்குளம் - 46 மி.மீ., உடுமலை - 40.40 மி.மீ., காங்கயம் - 5.60 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக, ஒரே நாளில், 64.71 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவத்தில், அக்., மாதத்தில், 197.70 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது; இம்மாதத்தில் இதுவரை, 12 நாட்கள் கனமழை பெய்துள்ளது; மொத்தம், 198.84 அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த, 15 ஆண்டு மழைப்பொழிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அக்., மாதம், 50 மி.மீ., அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.இம்மாதத்தில், சராசரியாக, 108 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை கிடைத்து வந்தது; கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு, 17 நாட்களில், 198.84 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.திருப்பூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு என்பது, 618 மி.மீ., என கணக்கிடப்பட்டுள்ளது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக, 779.52 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டு, கடந்த, 48 நாட்களில், 26 நாட்கள் மழை பெய்துள்ளது; மொத்தம், 396.55 மி.மீ.. அளவுக்கு மழை பெய்துள்ளது.கட்டுப்பாட்டு அறைசுறுசுறுப்புதிருப்பூர் மாவட்டத்தில், 1077 என்ற கட்டணமில்லா எண்ணுடன், மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.வெள்ள பாதிப்பு மற்றும் சேதம் குறித்து, 0421 2971133, 2971199 என்ற எண்களில் தகவல் அளிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரமும் கண்காணித்து, மழையால் பாதித்த மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டுமென, தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X