சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் கொலையில் நால்வர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்:வழக்கறிஞர் கொலையில் தந்தை, இரு மகன்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் என்பவர் 2020 மார்ச் 8ல், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து பைக்கில் சென்றார். அப்போது, பின்னால் காரில் வந்த கும்பல் இடித்து கீழே தள்ளி, அவரை வெட்டி கொலை செய்தது. இக்கொலையில், மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினருடன்

உத்தமபாளையம்:வழக்கறிஞர் கொலையில் தந்தை, இரு மகன்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் என்பவர் 2020 மார்ச் 8ல், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து பைக்கில் சென்றார். அப்போது, பின்னால் காரில் வந்த கும்பல் இடித்து கீழே தள்ளி, அவரை வெட்டி கொலை செய்தது.

இக்கொலையில், மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினருடன் சில வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.இரண்டாவது குற்றவாளியாக வழக்கறிஞர் மதன், 36 இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, மதன் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து பைக்கில் சென்றார்.ரஞ்சித்தின் தந்தை கருணாநிதி, 70, இரு சகோதரர்கள், உறவினர் என நான்கு பேர் காரில் பின் தொடர்ந்து சென்று, பைக்கை இடித்து தள்ளி, கோடாரி, கத்தியால் மதனை வெட்டி கொலை செய்தனர்.
கொலையாளிகள், காரில் அம்மாபட்டி வழியாக தேனி செல்லும் போது நேற்று போலீசார் மடக்கினர். காரில் இருந்த நால்வரையும் கைது செய்து, ஆயுதங்களுடன் காரைபறிமுதல் செய்தனர். கருணாநிதி வாக்குமூலத்தில், 'என் மகன் ரஞ்சித்தை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தேன்.'என் மகனை எப்படி கொலை செய்தனரோ அதே பாணியில் கொலை செய்தோம். ஒன்பது மாதங்களாக என் மனதிலிருந்த பாரம் இறங்கியது' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X