லாரி மீது கார் மோதி இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதி இருவர் பலி

Added : நவ 19, 2021
Share
திண்டுக்கல்:வத்தலகுண்டு அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த கார், வத்தலகுண்டு பை-பாஸ் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதில் கார் டிரைவர் காஜாமைதீன், 38; உத்தமபாளையத்தைச் சேர்ந்த மரியதாஸ், 55, சம்பவ இடத்தில்

திண்டுக்கல்:வத்தலகுண்டு அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த கார், வத்தலகுண்டு பை-பாஸ் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதில் கார் டிரைவர் காஜாமைதீன், 38; உத்தமபாளையத்தைச் சேர்ந்த மரியதாஸ், 55, சம்பவ இடத்தில் பலியாகினர்.
மரியதாஸ் மனைவி ஆரோக்கியமேரி காயமடைந்தார்.இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.பட்டிவீரன்பட்டி போலீசார் கூறுகையில், 'எச்சரிக்கை விளக்கு இல்லாமல், லாரி பை-பாஸ் ரோட்டில் நின்றிருந்ததால் விபத்து நடந்துள்ளது. 'பை-பாஸ் ரோட்டில் கனரக வாகனங்களை நிறுத்துபவர்கள், அதற்குரிய இடத்தில் ஓரமாக நிறுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X