தமிழ்நாடு

மூலப்பொருட்கள் விலை கடும் உயர்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: சாயங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துவருவதால், திருப்பூர் பிரின்டிங் துறையினர் தவிக்கின்றனர்; 30 சதவீதம் பிரின்டிங் கட்டண உயர்வு எதிர்பார்க்கின்றனர்.திருப்பூரில், 500க்கும் மேற்பட்ட டேபிள், செஸ்ட் பிரின்டிங் நிறுவனங்கள் உள்ளன. பிரின்டிங் மூலப்பொருளான சாயம், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து

திருப்பூர்: சாயங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துவருவதால், திருப்பூர் பிரின்டிங் துறையினர் தவிக்கின்றனர்; 30 சதவீதம் பிரின்டிங் கட்டண உயர்வு எதிர்பார்க்கின்றனர்.திருப்பூரில், 500க்கும் மேற்பட்ட டேபிள், செஸ்ட் பிரின்டிங் நிறுவனங்கள் உள்ளன. பிரின்டிங் மூலப்பொருளான சாயம், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், பிரின்டிங் மூலப்பொருட்கள் விலை வேகமாக உயர்ந்துவருகிறது. கிலோ 100 ரூபாயாக இருந்த பைண்டர், 150 ரூபாய்; 300 ரூபாயாக இருந்த நான் பி.வி.சி., இங்க், 400 ரூபாய்; 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்போஸிங்கிற்கு தேவையான ஸ்கிரீன் கோட்டிங், 950 ரூபாய்; 100 ரூபாய்க்கு கீழ் இருந்த பேலட் கம், 250 ரூபாய்.ஐந்தாயிரம் ரூபாயாக இருந்த 100 மீட்டர் பாயில் பேப்பர் ரோல், ஏழாயிரம் ரூபாய் என, அனைத்து பிரின்டிங் மூலப்பொருட்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால், திருப்பூர் பகுதி பிரின்டிங் துறையினர், தவியாய் தவிக்கின்றனர்.'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த்:அனைத்து வகை பிரின்டிங் சாயங்கள், மூலப்பொருட்கள் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளன. இதனால், ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களோ, பிரின்டிங் கட்டண உயர்வு வழங்க மறுக்கின்றனர்; கட்டண தொகைகளை வழங்கவும் நீண்ட காலம் தாமதிக்கின்றனர்.பண சுழற்சி பாதிப்பால், குறு, சிறு பிரின்டிங் நிறுவனங்கள், தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இத்துறை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.முன்பணம் செலுத்தினால் மட்டுமே, பிரின்டிங் நிறுவனங்களுக்கு, சாயங்கள் கிடைக்கிறது; அதுவும், உடனடியாக தேவையான அளவு சாயங்கள் கிடைப்பதில்லை.மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 30 சதவீதம் பிரின்டிங் கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டும். கட்டண நிலுவை தொகைகளையும் உடனடியாக வழங்கவேண்டும். சங்க செயற்குழுவை கூட்டி, விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.'டிப்டா' செயலாளர் கணேஷ்:சீனா, கொரியாவில் மிகப்பெரிய சாய மூலப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; வாடகையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.இக்காரணங்களாலேயே பிரின்டிங் சாயங்கள் விலையில், கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. வரும் 2022 ஏப்ரல் வரை, சாயங்கள் விலை மேலும் உயரும் என்றே உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பிரின்டிங் துறையினர், ஆடை உற்பத்தியாளரிடம் விலை உயர்வு பெறவேண்டியது அவசியம்; இல்லையெனில், லாபத்தை இழக்க நேரிடும். அதேபோல், ஆடை உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களிடம் ஆடை விலையை உயர்த்தி பெறவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X