கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு சலுகை உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை:வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்ததற்கு எதிரான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2016, 2017

மதுரை:வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்ததற்கு எதிரான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2016, 2017 மற்றும் 2019ல் பல்வேறு தேதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு நிர்வாகம் பாதித்தது.

போராட்டத்திற்கு 2017ல் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், வேலை நிறுத்தம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்று, சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளது.
போராட்ட காலத்திற்குரிய பண பலன்கள், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க, தமிழக அரசு பிப்ரவரி 2 மற்றும் அக்டோபர் 13ல் அரசாணை வெளியிட்டது. இது சட்ட விரோதம். அரசாணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன், 'இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இதில் நீதிமன்றம் எதுவும் செய்வதற்கில்லை' என தெரிவித்தனர். மேலும், தமிழக தலைமைச் செயலர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நான்கு வாரங்கள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X