ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு பிரபல ஓட்டலில் 'ரெய்டு'

Added : நவ 19, 2021
Share
Advertisement
அவிநாசி: திருப்பூர் மற்றும் அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டிலுள்ள பிரபல ஓட்டலில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.திருப்பூரில் இரண்டு மற்றும் அவிநாசி பைபாஸ் ரோடு என மூன்று இடத்தில் செயல்படும், திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டலில், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில், அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர். நேற்று காலை, 11:00 மணிக்கு சென்ற அதிகாரிகள், ஓட்டலை மூட

அவிநாசி: திருப்பூர் மற்றும் அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டிலுள்ள பிரபல ஓட்டலில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.திருப்பூரில் இரண்டு மற்றும் அவிநாசி பைபாஸ் ரோடு என மூன்று இடத்தில் செயல்படும், திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டலில், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில், அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர். நேற்று காலை, 11:00 மணிக்கு சென்ற அதிகாரிகள், ஓட்டலை மூட செய்தனர். அதன்பின், விற்பனை 'பில்' தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.'ரெய்டு' குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், 'அரசு விதிமுறைக்கு உட்பட்டு, ஜி.எஸ்.டி., செலுத்தாமல் இருப்பதும், வரி ஏய்ப்பு தான். அந்த புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடத்தப்படுகிறது. ஆவணங்களை சரிபார்த்த பின், இது தொடர்பான அறிக்கை உயரதிகாரிகளிடம் வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X