மாநில போட்டிக்கு தகுதி மாணவருக்கு பாராட்டு | Dinamalar

மாநில போட்டிக்கு தகுதி மாணவருக்கு பாராட்டு

Added : நவ 19, 2021
Share
திருப்பூர்: அவிநாசி, கணியாம்பூண்டி ஸ்ரீ செந்தூர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர்.திருப்பூர் மாவட்ட அத்லெடிக் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அக்சய்குமார் 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும்

திருப்பூர்: அவிநாசி, கணியாம்பூண்டி ஸ்ரீ செந்தூர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர்.திருப்பூர் மாவட்ட அத்லெடிக் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அக்சய்குமார் 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும் வென்றார்.ஏழாம் வகுப்பை சேர்ந்த கிரிஷ் ராஜ்பர், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவ்விரு மாணவர்களும், திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கு பெற தேர்வாகியுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், தடகள பயிற்சி ஆசிரியர் ஜெய்கணேஷையும் பள்ளித் தாளாளர் முருகசாமி, முதல்வர் கலாமணி, துணை முதல்வர் மனோஷினி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X