சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனமழையால் பூமியில் புதைந்த கிணறு கட்டுமானம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் அரசு பள்ளி அருகே கனமழையால் குடிநீர் கிணற்றின் கட்டுமானம் திடீரென பூமிக்குள் புதைந்தது.இந்த ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேவைக்காக அரசு துவக்கப்பள்ளி அருகே கட்டுமானத்துடன் கிணறு அமைத்தனர். குடியியிருப்பு, பள்ளி, மெயின் ரோட்டோரம் இருக்கும் கிணற்றில் விபத்து ஏற்படாமலிருக்க சுற்றுச்
 கனமழையால் பூமியில் புதைந்த கிணறு கட்டுமானம்

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் அரசு பள்ளி அருகே கனமழையால் குடிநீர் கிணற்றின் கட்டுமானம் திடீரென பூமிக்குள் புதைந்தது.
இந்த ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேவைக்காக அரசு துவக்கப்பள்ளி அருகே கட்டுமானத்துடன் கிணறு அமைத்தனர். குடியியிருப்பு, பள்ளி, மெயின் ரோட்டோரம் இருக்கும் கிணற்றில் விபத்து ஏற்படாமலிருக்க சுற்றுச் சுவருடன் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தியிருந்தனர்.சில தினங்களாக மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது.

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென கிணற்றின் கட்டுமானம் மண்ணில் புதைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மேலெழுந்தது. குடியிருப்பு அருகே நடந்த சம்பவத்தால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X