பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மீண்டும் கேரளாவுக்கு நீர்திறப்பு: 141 அடியை எட்டியதும் குறைகிறது நீர்மட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கூடலுார்:விதி வளைவு என்னும் அணை நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) நடைமுறையால் முல்லை பெரியாறு அணையில் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பு இருந்தும், விதி வளைவு என்னும் அணையின் நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) என்ற
 பெரியாறு அணையில் மீண்டும் கேரளாவுக்கு நீர்திறப்பு: 141 அடியை எட்டியதும் குறைகிறது நீர்மட்டம்

கூடலுார்:விதி வளைவு என்னும் அணை நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) நடைமுறையால் முல்லை பெரியாறு அணையில் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பு இருந்தும், விதி வளைவு என்னும் அணையின் நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) என்ற நடைமுறையால் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்.,29ல் நீர்மட்டம் 138.85 அடியாக இருந்தபோது கேரளப் பகுதிக்கு அணையை ஒட்டியுள்ள 8 ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக 3870 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

அதன்பின் மழை சற்று குறைந்ததால் நவ.,6ல் ஷட்டர்கள் அடைக்கப்பட்டு நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மீண்டும் துவங்கிய கனமழையால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. காலை 8:00 மணிக்கு 3, 4 ஆகிய இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 772 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் காலை 10:00 மணிக்கு 2, 5 என மேலும் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, மொத்தமுள்ள 4 ஷட்டர்கள் மூலம் 1544 கனஅடி நீர் கேரள பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.குறையும் நீர்மட்டம்தமிழக பகுதிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேவேளையில் கேரள பகுதிக்கும் 1544 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பகலில் நீர்ப்பிடிப்பில் மழை குறைந்ததால் நீர்வரத்து மாலை 3:00 மணி நிலவரப்படி 94 கன அடியாக குறைந்தது. இதனால் காலையில் 141 அடியாக இருந்த நீர்மட்டம் குறைந்து 140.95 அடியானது. (மொத்த உயரம் 152 அடி).கண்காணிப்புஅணையில் தமிழக பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுபோல், அணை நீர்மட்டம், நீர்வரத்து, மழை அளவு, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கேரள நீர்வளத்துறையால் நியமிக்கப்பட்ட செயற்பொறியாளர் தலைமையிலான பொறியாளர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணை நிலவரம் குறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும், கேரள அரசுக்கும் தெரியப்படுத்தி வருகின்றனர்.2 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைஅணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதும் கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புதுரை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கான அறிவிப்பை தமிழக பொதுப்பணித்துறையினர், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தனர். கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது. நவம்பர் 14ல் அணையின் நீர்மட்டம் 140 அடியாக இருந்தபோது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்து 142 அடியாக உயரும்போது மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X