கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்கு வாபஸ்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை:ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2016, 2017 மற்றும்

மதுரை:ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2016, 2017 மற்றும் 2019ல் பல்வேறு தேதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு நிர்வாகம் பாதித்தது. மறியலால் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

போராட்டத்திற்கு 2017ல் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. சில சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் வழக்குகள் பதிந்தனர். வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்று, சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளது.போராட்ட காலத்திற்குரிய பணப்பலன்கள், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு பிப்.,2 மற்றும் அக்.,13 ல் அரசாணைகள் வெளியிட்டது.

இது சட்ட விரோதம். அரசாணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு ராம்குமார் ஆதித்யன் மனு செய்தார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இதில் நீதிமன்றம் எதுவும் செய்வதிற்கில்லை என்றனர்.தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X