பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை-மதுரை இடையே மின் மயத்துடன் 3வது அகல ரயில்பாதை: ரயில்வே வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : நவ 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை:அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை இடையே மின் மயத்துடன் கூடிய 3வது அகல ரயில் பாதை பணிகளை தற்போதே திட்டமிட வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், வெளிமாநில ரயில்களை துாத்துக்குடி, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மதுரையில் தென் மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்கள்

மதுரை:அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை இடையே மின் மயத்துடன் கூடிய 3வது அகல ரயில் பாதை பணிகளை தற்போதே திட்டமிட வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், வெளிமாநில ரயில்களை துாத்துக்குடி, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மதுரையில் தென் மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையா தலைமை வகித்தார். முதன்மை போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லுாரி, ரயில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்லா வர்மா, முதன்மை பாதுகாப்பு அதிகாரி சரவணன், கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் பங்கேற்றனர்.

காங்கிரஸ் எம்.பி.,க்கள் நவாஸ்கனி (ராமநாதபுரம்), விஜய்வசந்த்(கன்னியாகுமரி) தவிர 14 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:


திருநெல்வேலி புதிய கோட்டம்

வைகோ, ம.தி.மு.க., பொது செயலாளர்: கொரோனா தொற்றால் நாடு முழுவதும் நாலாயிரம் ரயில்வே ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும். பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி - கிணத்துக்கடவு வழித்தடத்தை மதுரைக்கு மாற்ற வேண்டும். ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையத்தை மதுரைக்கு மாற்ற வேண்டும்.

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். மதுரை -பெங்களூரு பகல் நேர ரயில், செங்கோட்டை - கோவை, ராமேஸ்வரம் - கோவை இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும். நாகர்கோவில்- ஐதராபாத் ரயில் விடவேண்டும். ஐதராபாத் சென்னை இடையே இயங்கும் மூன்று ரயில்களில் ஒன்றை நாகர்கோவில் வரை நீடிக்க வேண்டும்.


காரைக்குடியில் பிட்லைன்

கார்த்தி (காங்.,), சிவகங்கை: காரைக்குடியில் ரயில்களை பராமரிக்க புதிய பிட் லைன் அமைக்க வேண்டும். நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டும். ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.


கிழக்கு கடற்கரை ரயில் பாதை


கனிமொழி(தி.மு.க.,), துாத்துக்குடி: துாத்துக்குடியிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். கன்னியாகுமரியலிருந்து சென்னை வரை கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்க வேண்டும். குறைக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.


தேனி வரை ரயில் இயக்கப்படுமா

ரவீந்திரநாத் (அ.தி.மு.க.,), தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் 2011 முதல் நடக்கிறது. தற்போது தேனி வரை பணிகள் முடிந்துள்ளன. எனவே உடனடியாக மதுரை -தேனி வரை ரயில் இயக்க வேண்டும். தேனி - ஆண்டிப்பட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் - மதுரை வாராந்திர மூன்று முறை இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடி வரை இயக்க வேண்டும்.

பாண்டியன், திருப்பதி, பொதிகை விரைவு ரயில்கள் சோழவந்தானில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராமேஸ்வரம் டில்லி ரயில்


திருநாவுக்கரசர்(காங்.,), திருச்சி : பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10 ஆக குறைக்க வேண்டும். ஐ தராபாத் - சென்னை ரயிலை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து டில்லிக்கு நேரடி ரயில் விட வேண்டும். புதுக்கோட்டையில் அயோத்தியா ரயில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.


மூன்றாவது அகல ரயில் பாதை

விஜயகுமார் (அ.தி.மு.க.,) கன்னியாகுமரி: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை இடையே மின்மயத்துடன் கூடிய மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்க வேண்டும்.


மதுரை -- காரைக்குடி ரயில் பாதை

வெங்கடேசன்(மார்க்சிஸ்ட்), மதுரை: மதுரை சென்னை இடையே இயங்கும் தேஜஸ் ரயில் இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா விரைவு ரயில் காய்கறி வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் கட்டப்படும் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மதுரை - மேலுார் காரைக்குடி புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.


திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் மேம்பாடு

மாணிக்கம்தாகூர் (காங்.,), விருதுநகர்: எய்ம்ஸ் மருத்துவமனை, சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் ஸ்டேஷனை மேம்படுத்திட வேண்டும். மதுரை-போடி ரயில்வே லைனில் செக்கானுாரணியில் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அனைத்து விரைவு ரயில்களும் திருத்தங்கல், திருமங்கலம், திருப்பரங்குன்றத்தில் நின்று செல்ல வேண்டும். விருதுநகர், சாத்துார் ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும்.
கேரள எம்.பி.,க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், சோமபிரசாத் மற்றும் ஞானதிரவியம், தனுஷ் எம்.குமார் பேசினர். எம்.பி.,க்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
19-நவ-202123:16:39 IST Report Abuse
John Miller கனி மொழி அவர்களின் கோரிக்கை மிகவும் சரியானது. சென்னை டு கன்னியாகுமரி வரை கிழக்கு ரயில் பாதை விரைவில் அமைக்க வேண்டும். அத்துடன் தூத்துக்குடி டு திருநெல்வேலி புதிய ரயில்பாதையும் அமைக்க வேண்டும். புல்லெட் ரயில்பாதையை மூன்றாவது பாதையாக அமைக்கலாம்.
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
19-நவ-202110:44:34 IST Report Abuse
R Hariharan R HARIHARAN 13-22/23 SRI SAI NAGAR NEAR HUDA PARK UPPAL HYDERABAD - 500039 PHONE :9246308163 Dear Sir, As you are aware hardly 75 days to announce new railway budget for the year 2022-23. So far in Southern railway, particularly Virudhnagar- Senkottai/Tirunelveli neglected by railway board and more than 12 years over no new trains in this sector. In this regard I have sent so many mail to railway board, southern railway and Madurai division etc. It is still neglected and so far no action from your side. Again I am reminding to you this time and please consider the following in our sector at the earliest. Madurai-Virudhunagar/Tenkasi/Tirunelveli/kollam BG line is ready and few express trains, passengers trains are running and it is not sufficient in this sector. So many people travelling towards north and within Tamil Nadu also passengers are travelling for business, pilgrim sector to various cities. Hence please consider in the new budget and do the needful. NEW TRAINS FOR THIS SECTOR. Kollam-Shencottai Mumbai, Kolkata, New Delhi, Hyderabad, Ahmedabad, Bangalore express trains either bi weekly or daily basis. Chennai-Shenkottai-Kollam Thiruvandraum express daily basis Chennai-thiruvandurm via shencottai tenkasi day time express Kolam Madurai via Shencottai FP trains Kollam Nagore via Shencottai FP trains Hyderabad - Thiruvandrum express via Chennai Egmore Rajapaylam, Shencottai etc. Trichy-Karaikuddi-Virudhunagar Kollam Inter city express. Kollam Shencottai Kanyakumari/rameshwaram express. PASSENGERS TRAINS Kolltam Karaikkudi Fast Passenger Kollam Madurai Fast Passenger Shencottai to Tiruchendur/Nagore/Coimbatore/Kanyakuamari/Karaikkudi FF Madurai-tirunelveli-Shencottai passgners service frequency to be increased. Hyderabad=tuticorin daily express EXTENSION OF SERVICES Nizamuddin Madurai SK Express to be extended upto Shencttai/Kollam Kacheguda-Chingleput express to be extended to Madurai/Shencottai Kacheguda-Kakinada express to be extended upto MaduraiShencottai Kacheguda-Madurai weekly express to be extended to Shencottai/Kollam We understand that Hyderabad-Charminari which is running upto tambaram is going to be extended upto Kanyakumari and if so please do the same. FEQUENCY TO BE INCREASED. Thirukural express to be run daily basis Kongu Express to be run daily basis. Howarah-Trichy/Kanyakumari express to be run daily basis. Kacheguda-Maduai/Nagerkovil express to be run basis. Silambu express to be run basis. Ernakulam-Velankanni to be run from weekly to bi weekly or daily basis. Oha=-Ramesharam/Tuticorin express to be run daily basis. New Delhi -Madurai SK Express to be run daily INFRASTRUCRE Chennai Egmore to Kanykumari BG Line has been covered. Now double line and electrification works is under progress. Virudhungar - Shencottai electrification work is under progress and some areas alrady put electrif poles also. Hence complete the electrification upto Kollam gradually. Also start double line Virudhungar-Shencottai-kollam etc and Tenkasi-Tirunelveli/tiruchendur electrifications and double line should be start. Hope my above points will be considered in the forthcoming budget. Regards RHARIHARAN 18.11.2021
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
19-நவ-202109:55:50 IST Report Abuse
R Hariharan நன்றி. இது பற்றி பல தடவை தென்னக ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிருக்கிறான். ஏன் கன்னியாகுமாரி , தென்காசி லோக் சபா மெம்பெர் கலந்து கொள்ளவில்லை. ஹைதெராபாத் சென்னை சார்மினார் கன்னியாகுமாரி வரை நீடிக்கப்பற்றுப்பத்த தகவல் தெரிய வந்தது. கூடிய சீஇக்ரம் இதனை அமல் படுத்த வேண்டும். கொள்ளலாம்/திருவந்திபுரம் சென்னை செங்கோட்டை, ராஜபயாலயம் மார்க்கமாக பகல் நேர ரயில் சேவை வேண்டும் . குருத்யுர் புனலூர் எக்ஸ்பிரஸ் மதுரை வரை நீடிக்க வேண்டும். திருக்குறள், கொங்க , சிலம்பு எக்ஸ்பிரஸ் டெய்லி விட வேண்டும். ஹைதெராபாத் கொல்லம் சென்னை மதுரை மார்க்கமாக ரயில் விட வேண்டும். திருச்சி கொல்லம் காரைக்குடி ,விருதுநகர், ராஜபாளையம் மார்க்கத்தின்ல் இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் விட வேண்டும். கொல்லத்தினலூர்த்து மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, பெங்களூரு, ஹைதெராபாத் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விட வேண்டும். மும்பை மதுரை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும். ஹைதெராபாத் நாகர்கோவில்/மதுரை எக்ஸ்பிரஸ் தினசரி விட வேண்டும். சென்னை தேனீ மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் றில் விட வேண்டும். மதுரை தேனீ பயணில்கள் ரயில் சேவை தொடங்க வேண்டும். திருநெல்வேலி கல்லிடை அம்பை தென்காசி மார்க்கத்தில் சென்னிக்கு எக்ஸ்பிரஸ் விட வேண்டும். தாம்பரம் செங்கோட்டை அன்டோடைய எக்ஸ்பிரஸ் விட வேண்டும். இதில் பகலில் சென்னை செல்ல வசதிக இருக்கும். ஹைதெராபாத் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விட வேண்டும். எர்ணாகுளம் வேளாங்கண்ணி தினசரி விட வேண்டும். செங்கோட்டை நாகூ, கோவை, காரைக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை தொடங்க்க வேண்டும். மீண்டும் நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X