சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 8.10 கோடி ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்தவர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிவகாசியை மையமாக கொண்ட டைல்ஸ், பேப்பர் மற்றும் ரசாயனங்கள் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்கள் ரூ.8.10 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. நிறுவன பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிறுவனங்கள் பல வகையில் ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு ஏற்படும் வகையில் போலி விற்பனை ரசீது தயாரித்தல், முறையான

மதுரை:மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிவகாசியை மையமாக கொண்ட டைல்ஸ், பேப்பர் மற்றும் ரசாயனங்கள் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்கள் ரூ.8.10 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. நிறுவன பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிறுவனங்கள் பல வகையில் ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு ஏற்படும் வகையில் போலி விற்பனை ரசீது தயாரித்தல், முறையான ஆவணங்கள் இல்லாமல் உள்ளீட்டு வரி எடுத்தல் என முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு ரூ.8.10 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிறுவனங்கள் ரூ.5 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதால் இரு நிறுவனங்களுக்கும் பொறுப்பாளரான 33 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். டிச., 1 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடக்கிறது என கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X