நீதிமன்றத்துக்குள் நீதிபதியை தாக்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுபாணி:பீஹார் மாநிலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, தடாலடியாக புகுந்து நீதிபதியை தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதுபாணி மாவட்டம் ஜன்ஜ்ஹர்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்து

மதுபாணி:பீஹார் மாநிலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, தடாலடியாக புகுந்து நீதிபதியை தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதுபாணி மாவட்டம் ஜன்ஜ்ஹர்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்து கொண்டு இருந்தது. நீதிபதி அவினாஷ் குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது, கோஹர்திகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோபால் பிரசாத், சப் இன்ஸ்பெக்டர் அபிமன்யு குமார் ஆகியோர் தடாலடியாக நீதிமன்றத்துக்குள் நுழைந்தனர். நீதிபதி அவினாஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும், துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டினர். இந்த சம்பவத்தால் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பாய்ந்து சென்று நீதிபதியை மீட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. பல வழக்குகளில் ஆஜராகாமல் இருந்ததால், இரு போலீஸ் அதிகாரிகளையும் நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து, அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X