சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயதான தம்பதியை தாக்கி 16 பவுன் நகை கொள்ளை

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை:வயதான தம்பதியினரை தாக்கி மர்மநபர்கள் 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள ஆல்வின் நகரில் வசிப்பவர் ராஜசேகர்,62. மனைவி சாந்தி,57.நேற்றிரவு முன் தினம் இரவு முகமூடி அணிந்த 4 பேர் இவர்களது வீட்டின் கதவை உடைத்து நுழைந்தனர். துாங்கி கொண்டிருந்த தம்பதியை, எழுப்பி பணம் மற்றும் நகை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். பீரோவை

கோவை:வயதான தம்பதியினரை தாக்கி மர்மநபர்கள் 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள ஆல்வின் நகரில் வசிப்பவர் ராஜசேகர்,62. மனைவி சாந்தி,57.நேற்றிரவு முன் தினம் இரவு முகமூடி அணிந்த 4 பேர் இவர்களது வீட்டின் கதவை உடைத்து நுழைந்தனர். துாங்கி கொண்டிருந்த தம்பதியை, எழுப்பி பணம் மற்றும் நகை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பீரோவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.2லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.இத்தகவல் தெரிந்ததும், கோவை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் சதீஸ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.சிங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான போலீசார் மற்றும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது
.போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடவருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X