சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகநேற்றும் சோதனைநடத்தினர்.சென்னையை தலைமையிடமாக வைத்து மகாலட்சுமி கட்டுமான நிறுவனமும் வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனமும் செயல்படுகின்றன.இவை வரி ஏய்ப்புசெய்வதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள

சென்னை:சென்னையில் இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகநேற்றும் சோதனைநடத்தினர்.
சென்னையை தலைமையிடமாக வைத்து மகாலட்சுமி கட்டுமான நிறுவனமும் வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனமும் செயல்படுகின்றன.இவை வரி ஏய்ப்புசெய்வதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள மகாலட்சுமி கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ள வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரி அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறவினர்கள் அதிகாரிகள் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
நேற்றும் இந்த சோதனை தொடர்ந்தது.இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு முக்கிய ஆவணங்களும் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சோதனை முடிந்த பின் இதுகுறித்த விபரங்கள் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X