பொது செய்தி

தமிழ்நாடு

141 அடியை எட்டியது பெரியாறு அணை

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021
Share
Advertisement
கூடலுார்,: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் வல்லக்கடவு, வண்டி பெரியாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.முல்லை பெரியாறு அணை, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணையின் பராமரிப்பு, தமிழக அரசிடம் உள்ளது. தொடர் கன மழையால், பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு 141 அடியை
  141 அடியை எட்டியது பெரியாறு அணை

கூடலுார்,: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் வல்லக்கடவு, வண்டி பெரியாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணை, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணையின் பராமரிப்பு, தமிழக அரசிடம் உள்ளது. தொடர் கன மழையால், பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு 141 அடியை எட்டியது.

கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, வண்டி பெரியாறு, உப்புதுரை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.


latest tamil news



கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க, இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தது. நவம்பர் 14ல், அணையின் நீர்மட்டம் 140 அடியாக இருந்தபோது, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்து 142 அடியாக உயரும்போது, மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்படும்.

* நிரம்பியது ஆழியாறு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. மொத்த உயரம் 120 அடி. தொடர் மழை காரணமாக ஆக., 31ல் அணை முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர் வீணாகாமல் இருக்க, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, தொடர் மழையால் 119.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 11 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

***

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X