பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; இன்று மாலை மஹா தீபம்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (நவ.,19) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும் பார்வதிக்கு, சிவபெருமான இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை
Tiruvannamalai,திருவண்ணாமலை,பரணி தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (நவ.,19) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும் பார்வதிக்கு, சிவபெருமான இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் நவம்பர் 10ம் தேதி, தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

10வது நாளான இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


latest tamil news



'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும், பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம் எனவும் கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-நவ-202106:40:23 IST Report Abuse
SUBBU - MADURAI இந்துக்களின் விழாக்களை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபமான இன்று வரை தமிழக விடியல் அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அமலில் இருக்கும். அப்றம் கிறிஸ்தவர்களின் திருவிழாவான கிறிஸ்த்துமஸை முன்னிட்டு நாளையில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் அறவே நீக்கப்படும். இப்படிக்கு விடியல் அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X