சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேற்கூரை பெயர்ந்து விழுந்தது  வி.ஏ.ஓ., உதவியாளர்கள் ஓட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே கனமழையால், வி.ஏ.ஓ., அலுவலக கட்டட மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்ததால், உதவியாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டது. இரு வாரங்களாக பெய்து வரும் மழைக்கு, கட்டடத்தின் மேற்கூரை வலுவிழந்தது. நேற்று பகல் 12:00 மணியளவில், வி.ஏ.ஓ., அய்யப்பன், கிராம

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே கனமழையால், வி.ஏ.ஓ., அலுவலக கட்டட மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்ததால், உதவியாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டது. இரு வாரங்களாக பெய்து வரும் மழைக்கு, கட்டடத்தின் மேற்கூரை வலுவிழந்தது. நேற்று பகல் 12:00 மணியளவில், வி.ஏ.ஓ., அய்யப்பன், கிராம உதவியாளர்கள் இருவர் பணியில் இருந்தனர். அப்போது, மேற்கூரையில் இருந்து பெரிய சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.அதிர்ஷ்டவசமாக தப்பிய மூவரும், அலுவலகத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அலுவலகத்திற்குள் இருந்த கிராம வருவாய் கோப்புகளை பத்திரமாக மீட்டனர். ஆர்.டி.ஓ., ராம்குமார், தாசில்தார் சிவக்குமார் பார்வையிட்டனர். புதிதாக வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டும் வரை, கிராம சேவை மையத்தில் பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X