பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-கனமழை காரணமாக வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 10:00 மணியளவில் வினாடிக்கு 2500 கன அடி நீர் வரத்து இருந்தது.அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32 அடி) 534.528 மில்லியன் கன அடியாக (31.100 அடி) நீர்

விக்கிரவாண்டி-கனமழை காரணமாக வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 10:00 மணியளவில் வினாடிக்கு 2500 கன அடி நீர் வரத்து இருந்தது.அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32 அடி) 534.528 மில்லியன் கன அடியாக (31.100 அடி) நீர் மட்டம்உயர்ந்தது.பிற்பகல் 4:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 6,850 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 7 கதவுகளை திறந்து 9,030 கனஅடி உபரி நீரை வெளியேற்றினர். அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், தலைமையில் உதவி செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்திஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்துகண்காணித்துவருகின்றனர்.அணையில் யாரும் குளிக்காத வகையில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X