பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் எட்டு மணி நேரம் மின்தடை

Added : நவ 19, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் மழையால் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ரகுமான் நகரில் மழையால் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க நெல்லிக்குப்பத்தான் வாய்க்காலை துார் வாரினர். மின்கம்பங்கள் அருகேயும் துார் வாரியதால் பலமின்றி இருந்தன. சில தினங்களாக மழை பெய்வதால் வாய்க்கால் அருகே இருந்த 4

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் மழையால் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ரகுமான் நகரில் மழையால் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க நெல்லிக்குப்பத்தான் வாய்க்காலை துார் வாரினர். மின்கம்பங்கள் அருகேயும் துார் வாரியதால் பலமின்றி இருந்தன. சில தினங்களாக மழை பெய்வதால் வாய்க்கால் அருகே இருந்த 4 மின் கம்பங்கள் விழுந்தன.அதனுடன் சேர்ந்திருந்த மின்சார டிரான்ஸ்பார்மரும் கீழே சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் நேற்று மதியம் 12 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் விழுந்தவுடன் மின்சாரம் நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது. கொட்டும் மழையிலும் உதவி மின்பொறியாளர் அருள் தலைமையில் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் விழுந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்களை சரி செய்தனர். 8 மணி நேரத்துக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. மழையிலும் சிரமப்பட்டு பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X