பொது செய்தி

தமிழ்நாடு

18 அரசு பஸ்களை இயக்க கடலுாரில் தற்காலிக தடை

Added : நவ 19, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில், தகுதியில்லாத 18 அரசு பஸ்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலுார் உட்பட 11 இடங்களில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 241 டவுன் பஸ்கள் உட்பட 598 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதில், சில பஸ்கள் பழுதடைந்து இயக்க தகுதியற்று உள்ளதாக

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், தகுதியில்லாத 18 அரசு பஸ்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலுார் உட்பட 11 இடங்களில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 241 டவுன் பஸ்கள் உட்பட 598 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதில், சில பஸ்கள் பழுதடைந்து இயக்க தகுதியற்று உள்ளதாக புகார் எழுந்தது. தற்போது தொடர் மழை பெய்வதால், பழுதடைந்த பஸ்களில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை நேற்று ஆய்வு செய்தனர். அதில், 18 பஸ்கள் இயக்க தகுதியற்றவைகளாக கண்டறியப்பட்டன. அவற்றை இயக்க தற்காலிகமாக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அந்த பஸ்களை பழுது நீக்கி, புதுப்பிப்பு சான்று பெற்று இயக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X