சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரைப்பாலத்தில் திடீர் பள்ளம் கார் சிக்கியதால் பரபரப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அருகே சின்னகுச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் சிக்கியது.விழுப்புரம் பகுதிகளில் நேற்று தொடர் கனமழை பெய்தது. இதனால், ஆறுகள், குளங்கள், சிறுபாலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கோலியனுார் அடுத்த சின்னகுச்சிப்பாளையம் செல்லும் சாலையின் இடையே தரைப்பாலம் உள்ளது. இந்த

விழுப்புரம்-விழுப்புரம் அருகே சின்னகுச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் சிக்கியது.விழுப்புரம் பகுதிகளில் நேற்று தொடர் கனமழை பெய்தது. இதனால், ஆறுகள், குளங்கள், சிறுபாலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கோலியனுார் அடுத்த சின்னகுச்சிப்பாளையம் செல்லும் சாலையின் இடையே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக நேற்று மாலை 4:00 மணியளவில் சென்ற கார் முன்பகுதி திடீரென உள் வாங்கிய பள்ளத்தில் முன் பக்க டயர்கள் இறங்கியது.அப்பகுதி கிராம மக்கள் 30 நிமிடத்திற்கும் மேலாக போராடி, காரை வெளியே எடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்லாத வகையில் அப்பகுதி மக்கள் இருபுறமும் முட்களைப் போட்டு வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X