சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடை வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி

Added : நவ 19, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரம் அருகே ஓடை வெள்ளத்தில் மூழ்கி விவசாயி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், 39; விவசாயி. இவர், விவசாய நிலத்தில் இருந்த தனது உறவினருக்கு நேற்று மதியம் 2:00 மணியளவில் சாப்பாடு எடுத்துச் சென்றார்.அப்போது, வழியில் உள்ள ஓடையைக் கடக்க முயன்றார். ஓடையில் நீர்

கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரம் அருகே ஓடை வெள்ளத்தில் மூழ்கி விவசாயி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், 39; விவசாயி. இவர், விவசாய நிலத்தில் இருந்த தனது உறவினருக்கு நேற்று மதியம் 2:00 மணியளவில் சாப்பாடு எடுத்துச் சென்றார்.அப்போது, வழியில் உள்ள ஓடையைக் கடக்க முயன்றார். ஓடையில் நீர் அதிகளவில் சென்றதால் முனியப்பன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முனியப்பன் உடலை மீட்டனர்.அப்போது அங்கு வந்த அமைச்சர் பொன்முடி, கலெக்டர் மோகன் ஆகியோர் சம்பவ முனியப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, கண்டாச்சிபுரம் பகுதிகளில் மழைநீர் புகுந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X