பொது செய்தி

இந்தியா

பாகூர் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பாகூர்-பாகூர் ஏரியின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டிய நிலையில், அரங்கனுார் கலிங்குகள் வழியாக உபரி நீர் வெறியேறி வருகிறது.புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான

பாகூர்-பாகூர் ஏரியின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டிய நிலையில், அரங்கனுார் கலிங்குகள் வழியாக உபரி நீர் வெறியேறி வருகிறது.புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.இதனால், கடந்த 12ம் தேதி ஏரியின் முழு கொள்ளளவான 3 மீட்டர் நீர் மட்டத்தை எட்டியது. அதையடுத்து, ஏரியில் அதிகபட்ச நீர்பிடிப்பு அளவான 3.6 மீட்டர் வரை சேமிக்க பொதுப்பணித் துறையின் நீர்பாசன பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.அதையொட்டி, அரங்கனுார் கலிங்குகளில் தடுப்பு அமைத்தனர்.கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழையால் பாகூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அதிகபட்ச கொள்ளளவான 3.6 மீட்டரை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது.பங்காரு வாய்க்காலில் வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேறி வருகிறது.ஏரி பகுதியில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X