பொது செய்தி

இந்தியா

41 பேருக்கு கொரோனா தொற்று

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 41 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில்நேற்று முன்தினம் 2820 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,561 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 83 பேரும், லேசான அறிகுறியுடன் 234 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று

புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 41 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில்நேற்று முன்தினம் 2820 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,561 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 83 பேரும், லேசான அறிகுறியுடன் 234 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் 32 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,368 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1867 பேர் தொற்றுபாதிப்பால் இறந்துள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.45 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.45 ஆகவும் உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 98.29 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசியை 1075 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 2948 பேர் என மொத்தம் 4023 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாநிலத்தில் இதுவரை 11,69,082 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X