மலட்டாற்றில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மலட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர், சடலமாக மீட்கப்பட்டார்.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகன் உதயகுமார், 25. தனியார் கம்பெனி ஊழியர்.அவர், வடுக்குப்பம் மலட்டாறு தடுப்பணை அருகே நேற்று முன்தினம் நண்பர்களுடன் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார்

புதுச்சேரி-மலட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர், சடலமாக மீட்கப்பட்டார்.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகன் உதயகுமார், 25. தனியார் கம்பெனி ஊழியர்.அவர், வடுக்குப்பம் மலட்டாறு தடுப்பணை அருகே நேற்று முன்தினம் நண்பர்களுடன் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார் உதயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, இரவு முழுதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.நேற்று ஸ்கூபா டைவிங் ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் தேடினர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பிறகு உதயகுமார் உடல் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X