பொது செய்தி

இந்தியா

அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்' என அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனிகுமாரிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., அளித்துள்ள கோரிக்கை மனு:புதுச்சேரி மாநிலத்தில், குறிப்பாக முதலியார்பேட்டை தொகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும்

புதுச்சேரி-'டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்' என அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனிகுமாரிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., அளித்துள்ள கோரிக்கை மனு:புதுச்சேரி மாநிலத்தில், குறிப்பாக முதலியார்பேட்டை தொகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து உடனடியாக தெளிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட தலைமை செயலர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையா அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாக கூறினார்.சந்திப்பின்போது பா.ஜ., விவசாய அணி தலைவர் புகழேந்தி, நகர மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X