பொது செய்தி

இந்தியா

பரோடா வங்கியின் வீட்டுக்கடன் முகாம் புதுச்சேரியில் நாளை துவங்குகிறது

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம் சார்பில் வீட்டுக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நாளை துவங்குகிறது.இது குறித்து வங்கியின் புதுச்சேரி பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பரோடா வங்கி முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ -2021'

புதுச்சேரி-பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம் சார்பில் வீட்டுக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நாளை துவங்குகிறது.இது குறித்து வங்கியின் புதுச்சேரி பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பரோடா வங்கி முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ -2021' என்ற பெயரில் வீட்டுக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி நாளை 20ம் தேதி, மறுநாள் 21ம் தேதி நடக்கிறது.இந்த முகாம், புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில், காலை 10.௦௦ மணி முதல் இரவு 8.௦௦ மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர், சொந்தமாக வீடு கட்டுவோர், வீடுகளை புதுப்பிக்க விரும்புவோர் என அனைவரின் தேவைக்கேற்ப மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.ஏற்கனவே அதிக வட்டி விகிதத்தில் வேறு நிறுவனங்களில் வீட்டு கடன் வாங்கியுள்ளோர் பரோடா வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ளும் வசதியும், அதே மாத தவணைக்குள் 'டாப் அப்' செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.உடனுக்குடன் கடன் அனுமதி கடிதம் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கடன் வாங்க இருப்பவர்களும், கடனை வேறு நிறுவனங்களில் இருந்து மாற்ற விரும்புவோரும் இந்த வாய்பபை பயன்படுத்தி பயன் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X