பொது செய்தி

இந்தியா

மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளதாக, மின் துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன.இதனை தொடர்ந்து நேற்று சட்டசபை வளாகத்தில், மின்துறை

புதுச்சேரி-தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளதாக, மின் துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன.இதனை தொடர்ந்து நேற்று சட்டசபை வளாகத்தில், மின்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம், ஸ்ரீதர், செயற்பொறியாளர்கள் ஞானசேகரன், பழனிசாமி, கனிஅமுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளிடம் கூறுகையில், 'தொடர் மழை மற்றும் காற்றின் வேகம் தற்போது அதிகமாக உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழை மற்றும் காற்று வீசும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X