புதுச்சேரி அரசின் ரூ.125 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி அரசின் ரூ.125 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்

Added : நவ 19, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி அரசு ரூ.125 கோடி மதிப்புள்ள 7 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.இதுகுறித்து நிதி துறை செயலர் பிரசாந்த் கோயல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ.125 கோடி மதிப்புள்ள ஏழு ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10

புதுச்சேரி-புதுச்சேரி அரசு ரூ.125 கோடி மதிப்புள்ள 7 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.இதுகுறித்து நிதி துறை செயலர் பிரசாந்த் கோயல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ.125 கோடி மதிப்புள்ள ஏழு ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திற்கும், அதன் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்த ஏலம், வரும் 23ம் தேதி மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடக்கிறது.ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள், கூட்டு போட்டி யில்லாத ஏலத்தை மின்னணு முறையில் பேசி முடிவு செய்து பங்கேற்கலாம். இந்த பிணைய பத்திரங்களுக்கு ஆறு மாதத்திற்கொரு முறை வட்டி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X