பொது செய்தி

இந்தியா

சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு பாலம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
பாகூர்-சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு;பாகூர் கொம்யூன் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராமத்தில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இவர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு,சோரியாங்குப்பம் சின்ன ஆற்றை

பாகூர்-சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு;பாகூர் கொம்யூன் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராமத்தில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இவர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு,சோரியாங்குப்பம் சின்ன ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.ஏற்கனவே, சின்ன ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 2016ம் ஆண்டு மழை வெள்ளத்தில் முற்றிலும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், கடந்த 5 ஆண்டுகளாக மழை காலங்களில் வெள்ள நீரை கடந்தும், வெயில் காலங்களில் சேறும் சகதியையும் கடந்து தான் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.இந்த இடத்தை பார்வை யிட்டு, ஏற்கனவே பழுத டைந்த பாலம் உள்ள இடத்தில் புதிய பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X