பொது செய்தி

இந்தியா

'டிக்கெட் வாங்காமல் பயணித்தால் அபராதம்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''பி.ஆர்.டி.சி., பஸ்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்'' என, பொது மேலாளர் ஏழுமலை எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின்(பி.ஆர்.டி.சி.,) மூலம் இயக்கப்படும் தொலைதுார, நகர மற்றும் புறநகர பஸ்களில் பயணிகள் பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வது மோட்டார்

புதுச்சேரி-''பி.ஆர்.டி.சி., பஸ்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்'' என, பொது மேலாளர் ஏழுமலை எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின்(பி.ஆர்.டி.சி.,) மூலம் இயக்கப்படும் தொலைதுார, நகர மற்றும் புறநகர பஸ்களில் பயணிகள் பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வது மோட்டார் வாகனச்சட்டப்படி குற்றமாகும். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், மோட்டார் வாகன சட்டத்தின்படி 500 ரூபாய் அல்லது ஐந்து மடங்கு பயணக்கட்டணம், இதில் எது அதிகமோ அத்தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X