பொது செய்தி

இந்தியா

பல்கலை., ஜப்தி நடவடிக்கைக்கு தடை

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பல்கலைக்கழக பொருட்கள் மீதான ஜப்தி நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் வகுப்பிற்கான மென்பொருளை இன்போபிளஸ் டெக்னாலஜிஸ் 2.90 கோடி ரூபாய் செலவில் செய்து கொடுத்தது. இதற்கான தொகையை பல்கலை நிர்வாகம் வழங்கவில்லை.அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி இரண்டாவது கூடுதல்

புதுச்சேரி-பல்கலைக்கழக பொருட்கள் மீதான ஜப்தி நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் வகுப்பிற்கான மென்பொருளை இன்போபிளஸ் டெக்னாலஜிஸ் 2.90 கோடி ரூபாய் செலவில் செய்து கொடுத்தது. இதற்கான தொகையை பல்கலை நிர்வாகம் வழங்கவில்லை.அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நீதிபதி இளவரசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரின் கார் கள், பஸ்கள், 200 கம்ப்யூட்டர்கள் என 18 வகை பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.கோர்ட் அமீனா வெங்கட், நேற்று முன்தினம் பல்கலைக் கழகம் சென்று, பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.இரண்டு நாட்களுக்குள் தொகையை வழங்குவதாக பல்கலை நிர்வாகம் கூறியதை தனியார் நிறுவன அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.இந்நிலையில், ஜப்தி நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.இவ்வழக்கு நீதிபதி சுப்ரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அடுத்த மாதம் 16ம் தேதி வரை ஜப்தி நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X