சிறுமி பலாத்கார வழக்கு மேலும் 2 வாலிபர்கள் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி நகர பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில், விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமியை உருளையன்பேட்டை போலீசார் மீட்டனர் அச்சிறுமி 40க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் சீண்டலுக்குள்ளானது தெரிய

புதுச்சேரி-மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி நகர பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில், விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமியை உருளையன்பேட்டை போலீசார் மீட்டனர் அச்சிறுமி 40க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் சீண்டலுக்குள்ளானது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 40 பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வசிக்கும் தேவநாதன்,24, பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் சர்வேயர் சீனுவாசன்,23, ஆகியோரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மற்ற 34 பேரின் முகவரிகளை சேகரித்துள்ள போலீசார் அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.விசா ரணையில், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, கேரளா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.அவர்களை கைது செய்ய, சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் உதவியை உருளையன்பேட்டை போலீசார் நாடியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X