பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் 'ஹலால்' சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள ஐகோர்ட்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சபரிமலை : சபரிமலையில் பயன்படுத்துவது 'ஹலால்' சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம்
sabarimala, halal, Kerala HC,High Court, கேரளா

சபரிமலை : சபரிமலையில் பயன்படுத்துவது 'ஹலால்' சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்துதான் சர்க்கரை வருகிறது. சில நாட்களாக பம்பை குடோனில் இருந்து வரும் சர்க்கரை சாக்குகளில் 'ஹலால்' என்ற முத்திரை உள்ளது; இது தொடர்பான வீடியாக்களும் வெளியானது.

இந்நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீசில் கொடுத்த புகாரில், அரவணை தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதற்கிடையே சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அப்பம், அரவணை தயாரிக்க 'ஹலால்' முத்திரை உள்ள சர்க்கரையை பயன்படுத்த தடை விதிக்கும் படி கோரியுள்ளார்.

இதில் ஆஜாராகி விளக்கமளித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழக்கறிஞர், 2019ல் வாங்கிய சர்க்கரையில் சில பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது என்றும், இது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டடு தவறுதலாக வந்து விட்டது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-நவ-202121:33:28 IST Report Abuse
Rasheel பாலைவனப்பகுதிகளில் மிருகங்களை கொடூரமாக கொலை செய்யும் முறை ஹலால் என்று சொல்லபடுகிறது. மூர்க்கன் எல்லாவற்றிலும் மூர்க்க முத்திரை நம்பர் 1.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-நவ-202117:43:39 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நாலு நாளைக்கு நல்ல இருந்து விட்டு சாகலாம் எதற்கு செயல் செய்தி வேதனை
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-நவ-202117:27:25 IST Report Abuse
Rasheel கம்மிகள் வோட்டுக்காக, திருட்டு அரபி பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் போல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X